எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.13 - தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. மிகவும் பதட்டமான 26 தொகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம் முறைகேடுகளை தடுக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் 2773 வேட்பாளர்கள் உள்ளனர். கடந்த 3 வாரங்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோர் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தனர். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல், பா.ஜ.க.தலைவர்கள் அத்வானி, நிதின்கட்காரி, சுஷ்மாசுவராஜ், அருண் ஜேட்லி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ்காரத், பிருந்தா காரத், டி.ராஜா, ஏ.பி.பரதன் ஆகியோர் தமிழகம் வந்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார்கள். நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டு போடலாம். வாக்காளர்கள் பயமின்றி சுதந்திரமாக வந்து வாக்களிக்க பாதுகாப்பு உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் 100 சதவீதம் கச்சிதமாக செய்து முடித்து விட்டது. வாக்கு சாவடிகளுக்கு தேவையான மின்னணு எந்திரம், அடையாள மை, மற்றும் எழுது பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகளை தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பார்வையிட்டார்.
சென்னை நகரில் நடைபெறும் தேர்தல் குறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் 3236 பூத்துகள் உள்ளன. 266 மண்டலங்களாக இவைகள் பிரிக்கப்படும். 1 மண்டலத்திற்கு 1 அதிகாரி பொறுப்பாக இருப்பார். வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டு விட்டன. இரவு பகலாக அதிகாரிகள் டூட்டியில் இருப்பார்கள். வாக்குப் பதிவு முடிந்து இரவு மின்னணு எந்திரங்களை அனுப்பும் வரை டூட்டியில் இருப்பார்கள் என்றார்.
வாக்குசாவடிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று இரவுக்குள் போய் சேர்ந்து விடும். எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. 1100 வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகிறது. மத்திய அரசு அதிகாரிகள் 500 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு செல்போன் வழங்கப்பட்டுள்ளது. அந்த போனில்தான் அவர்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று மாலை தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இன்று ஓட்டுப்பதிவுக்கு தேவையான இதர பொருட்களை பெற்றுக் கொண்டு, இன்றே ஓட்டுச்சாவடிக்கு சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார்கள். தமிழகம் முழுவதும் மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வெப்காமிரா மூலம் படம் பிடித்து இணையத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் 10 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப் பதிவு முழுமையாக படம் பிடிக்கப்படும். இவை தவிர சுமார் 13 ஆயிரம் தேர்தல் பார்வையாளர்கள் ரோந்து சுற்றி வந்து ஓட்டுப்பதிவை கண்காணிப்பார்கள். பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாநில போலீசாருடன் சுமார் 25 ஆயிரம் துணை நிலை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். முக்கிய தொகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்களில் வரதடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் நபர்களால் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் இருக்க நேற்றிரவு முதல் திருமண மண்டபங்கள், விடுதிகள், சமூக நலக் கூடங்களில் சோதனை நடந்து வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் இன்று வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு நூதனமான வழிகளில் பணம்பட்டு வாடா செய்யப்பட்டு விடலாம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே இன்று தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கண்காணிப்பு தீவிரமாக இருந்தது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வாரி, வாரி வழங்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. என்றாலும் குறிப்பிட்ட 26 தொகுதிகளில் பணம் பட்டுவாடா மிக, மிக அதிக அளவில் நடப்பதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் கள் வந்துள்ளன. இந்த 26 தொகுதிகளிலும் இன்றிரவு பணபட்டுவாடா தீவிரமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த 26 தொகுதிகளிலும் கூடுதல் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆதாரப்nullர்வமாக தகவல்கள் தரும் பட்சத்தில் தேர்தலை ரத்து செய்யவோ, அல்லது தேர்தலை ஒத்தி வைக்கவோ உயர் அதிகாரிகள் முடிவு எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 26 தொகுதிகளும் எவைஎவை என்ற தகவலை தெரிவிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். சென்னையில் கொளத்தூர் தொகுதி இந்த கண்காணிப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலில் மொத்தம் 4.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 80 லட்சம் பேர் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள். இவர்களில் சுமார் 50 லட்சம் பேர் முதன் முதலாக வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள nullத்சிலிப் இரண்டில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். பெரும்பாலான வாக்காளர்களுக்கு nullத் சிலிப் கொடுக்கப்பட்டு விட்டது. nullத்சிலிப் கிடைக்காதவர்கள் ஓட்டுச்சாவடிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் பணிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் அனைவரும் இன்றே தங்களுக்குரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். நாளை மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவ டையும். அதன் பிறகு மின் னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்படும். அடுத்த மாதம் (மே) 13ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.