எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 17-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களில் 32 பேருக்கு போட்டித்தரவரிசை வழங்கப்படுவது வழக்கம். இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச்சுக்கு (செர்பியா) முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
போட்டித்தரநிலையில் 2-வது இடத்தை டேனில் மெட்விடேவும் (ரஷியா), 3-வது இடத்தை அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி) பெற்றுள்ளனர். முன்னாள் சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-வது இடத்தில் இருக்கிறார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டிக்கு முதலிடமும், அரினா சபலென்காவுக்கு (பெலாரஸ்) 2-வது இடமும், கார்பின் முகுருஜாவுக்கு (ஸ்பெயின்) 3-வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது.
பல சாதனைகளை முறியடிப்பார்: ரபாடாவுக்கு 'நிதினி' புகழாரம்
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ரபாடா. இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர் 73 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். மயங்க் அகர்வால், ரகானே, பும்ரா, கேப்டன் விராட் கோலி ஆகியோரது விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இந்த தொடரில் ரபாடா இதுவரை 17 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளார்.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீரர் நிதினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது., ரபாடா வலிமையான பந்து வீச்சாளர். மிகவும் வேகமாக பந்துகளை வீசும் உடல் தகுதியை பெற்றுள்ளார். எல்லாவிதமான பந்துகளையும் வீசி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார். அவர் தற்போது 50 டெஸ்டில் 230 விக்கெட்டை தொட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, அவரால் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டை கைப்பற்ற முடியும். இவ்வாறு நிதினி கூறியுள்ளார்.
ஜோகோவிச் பற்றி தரக்குறைவாக பேசிய செய்தி வாசிப்பாளர்கள்
ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் முன்னணி செய்தியானது. அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு அவரது செய்தியை ஒளிப்பரப்பு செய்தனர். ஆஸ்திரேலியாவின் செவன் நியூஸ் சேனல் செய்தியாளர்கள் மைக் அம்ரோர்- ரெபேக்கா மாடர்ன் ஆகியோர் செய்தி வாசிக்க தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது மைக் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக என நினைத்து, ஜோகோவிச் குறித்து தரக்குறைவாக பேசினர்.
அவர் பொய் சொல்கிறார், மோசமான நபர். பொய் சொல்லி தப்பிக்க பார்க்கிறார் என திட்டி தீர்த்தனர். ஆனால் மைக் ஆன்-இல் இருந்ததால் அவர்கள் பேச்சு நேரடியாக ஒளிப்பரப்பானது. தரக்குறைவான பேச்சு வெளிப்படையாக ஒளிப்பரப்பு ஆனது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்ய ஆஸி. அரசு முயற்சி
தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க மருத்துவ ரீதியிலான விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதை ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்றவுடன் தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியா தனது முடிவை மாற்றிகொண்டது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறி அவரது விசாவை ரத்து செய்தது. ஆஸ்திரேலியா வந்த அவர் மெல்போர்ன் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். ஆஸ்திரேலிய குடியேற்ற துறையின் தடுப்பு காவல் மையமாக செயல்படும் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜோகோவிச் மெல்போர்ன் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஜோகோவிச்சின் விசா ரத்து நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய கோர்ட்டு தடை விதித்தது. ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தாலும் அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அவரது விசாவை மீண்டும் ரத்து செய்ய ஆஸ்திரேலிய குடியுரிமை துறை மந்திரி தனது தனிப்பட்ட அதிகாரத்தை உபயோகிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அரசு தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.
கேப்டன் கோலிக்கு பேட்டிங் பயிற்சியாளர் ரத்தோர் புகழாரம்
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அளித்த பேட்டியில், விராட் கோலிபேட்டிங் செய்யும் விதத்தில் ஒருபோதும் கவலை இல்லை, அவர் நன்றாக பேட்டிங் செய்தார். ஒரு பேட்டிங் பயிற்சியாளராக, அவர் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்று நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. அவர் வலை பயிற்சி மற்றும் களத்தில் மிகவும் சிறப்பாக இருந்தார்.
நல்ல மாற்றம் என்னவென்றால், அவர் மிகவும் ஒழுக்கமாக இருந்தார். நான் அதை ஒப்புக்கொள்கிறேன், அவர் மிகவும் அழகாகவும் திடமாகவும் இருந்தார். ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார், கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால், இது பெரிய ஸ்கோராக இருந்திருக்கலாம். இன்று அவர் சில கவர் டிரைவ்களை விளையாடினார், அவர் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்தார். இங்கு விளையாடுவது சவாலான சூழ்நிலை, ரன்களை எடுப்பது எளிதானது அல்ல, ஆனால் இன்றும் நாங்கள் சமமாக இருக்கிறோம். குறைந்தபட்சம் 50-60 ரன் அதிகமாக எடுத்திருக்க வேண்டும், அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பலூனில் பறக்கும் போது பிடித்த தீ; அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பிய ம.பி. முதல்வர் மோகன் யாதவ்
13 Sep 2025போபால் : மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் தீப்பிடித்தது. இதில் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
-
2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
13 Sep 2025மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
-
நேபாள இடைக்கால அரசின் பிரதமராக சுசீலா பதவியேற்பு : பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
13 Sep 2025புதுடில்லி : நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
13 Sep 2025சென்னை : திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம்: பிலிப் சால்ட் புதிய சாதனை
13 Sep 2025மான்செஸ்டர் : டி-20 போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்து பிலிப் சால்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
இன்று ஜப்பான் தலைநகரில் தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?
13 Sep 2025டோக்கியோ : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஜப்பானில் துவங்கவுள்ள நிலையில் இன்று தங்கப்பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் இடையே எழுந்த