எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
250 ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் தெரிவித்ததன் அடிப்படையில் அதன் உரிமையாளர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஆனாலும் தனியார் ஆம்னி பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. இதை பயன்படுத்தி ஒருசில ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்து இருந்தார். மேலும் இதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது 250 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் தெரிவித்ததன் அடிப்படையில் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தவிர அநேக ஆம்னி பஸ்கள் வரி செலுத்தாமல் இருந்தது தெரிய வந்தது. போக்குவரத்து துறை விதிகளை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுக்கள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு பெரும்பாலானவர்கள் சென்னை திரும்புகிறார்கள். இதனால் ஆம்னி பஸ்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் 18004256151 என்ற இலவச தொலைபேசி வழியாக புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் அரசு நிர்ணயிப்பதில்லை. இதனால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கிறார்கள். இதுபற்றி பொதுமக்கள் புகார் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் முகமது அப்சல் கூறியதாவது.,
இந்த தொழில் ஏற்கனவே நசுங்கி விட்டது. மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு தொழிலை செய்து வருகிறோம். பொங்கலுக்கு 3-ல் ஒரு பகுதி ஆம்னி பஸ்களே இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் கூட இடங்கள் முழுமையாக நிரம்பவில்லை. ஆனாலும் டீசல் விலை மற்றும் வரி உயர்வு இத்தொழில் மோசமாக நிலைக்கு செல்ல காரணமாக அமைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ


