எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கொரோனாவை முன்னிட்டு 5 மாநில தேர்தலுக்கான பேரணி, பொது கூட்டங்கள் நடத்த வரும் 31ம் தேதி வரை தடை தொடரும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா 3வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலங்களில் வருகிற பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
வரும் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை தேர்தல் நடைபெற உள்ளது. கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஜனவரி 15 ஆம் தேதி பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், 5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடையை ஜனவரி 22-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்தது. மேலும், அதிகபட்சமாக 300 நபர்கள் அல்லது 50 சதவீத இருக்கையுடன் உள் அரங்குகளில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. கொரோனா தொற்று பரவல் குறையாததால் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தெரிவித்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த சூழலில், இந்த தடை ஜனவரி 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு அனுமதி இருந்த நிலையில், தற்போது 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்புடைய கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


