முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலப்பு திருமண எதிர்ப்பு மாநாடு நடத்த தடை விதிக்க வழக்கு

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.19 - அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான கலப்பு திருமண எதிர்ப்பு மாநாட்டிற்கு தடை விதிக்க கேட்டு சென்னையை சேர்ந்த தமிழ்நாடு மக்கள் கட்சியின் இணை செயலாளரும், சட்டக் கல்லூரி மாணவியுமான திவ்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் சாதி, மதம், இனம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொங்கு வேளாள கவுண்டர் பேரவை சார்பில் மார்ச் 17ந் தேதி ஈரோட்டில் கலப்பு திருமண எதிர்ப்பு மாநாடு நடைபெற இருப்பதாக அதன் மாநில செயலாளர் பெங்களூர் இ.ரா.மணிகண்டன் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டின் நோக்கம் தலித் மக்களை பிற இன மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதே ஆகும். 

தலித் மக்களுடன் பிறபட்ட மக்கள் ஒன்றிணைவதை தடுக்க வேண்டுமென்பதே  இவர்களின் நோக்கமாகும். இது அரசியல் அமைப்பின் அடிப்படை தத்துவத்திற்க்கு எதிரானது. அரசு கலப்பு திருமணத்தை ஊக்குவித்து ஆதரித்து வருகிறது.இதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது.கலப்பு திருமணம் செய்துவரும் தம்பதியினருக்கு அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆகவே, கலப்பு திருமண எதிர்ப்பு பொது கூட்டத்திற்கு போலீசார் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். என தனது மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் எலிபி. தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் இந்த வழக்கில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநில செயலாளர் மணிகண்டனையும் பிரதிவாதியாக சேர்க்கும்படி உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago