எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, பிப்.10 - தமிழ்நாடு கலாச்சார பெருமையும்,தொய்மையும் வாய்ந்த நாடு என்று கவர்னர் ரோசய்யா தெரிவித்தார். மதுரையின் தொன்மையையும், பழம்பெருமையையும் அனைவருக்கும் எடுத்துக் கூறுகின்ற வகையில் மதுரை மக்களால் கொண்டாடப்பட்டு வரும் மாமதுரை போற்றுவோம் விழாவின் இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா பேசும் பொழுது தெரிவித்ததாவது,
மதுரையின் வரலாற்று சிறப்புகளை நினைவு கூறுகின்ற வகையிலும், கலாச்சாரத்தை போற்றுகின்ற வகையிலும் இந்த மாமதுரை விழாவை நடத்துகின்ற விழாக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குவதிலும், விழாப்பேருரையாற்றுவதிலும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியா மிகப்பெரிய கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், நாகரீகத்திலும் பெருமை வாய்ந்த நாடாக 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திகழ்ந்து வருகிறது. பல மொழிகள், பல மதங்கள், என்று பல்வேறுபட்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. தமிழ்நாடு கலாச்சார பெருமையும், தொன்மையும் வாய்ந்த நாடு. குறிப்பாக மதுரைக்கென்று தனிவரலாறு உள்ளது. மதுரையில்தான் திறமைவாய்ந்த தமிழ்புலவர்களைக் கொண்டு பழமைவாய்ந்த மூன்று தமிழ்ச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறிய இடம் மதுரை.
நமது கலாச்சாரத்தின் பெருமைகள் கோயில்களை பார்த்தாலே தெரியும். பழங்காலத்தில் கோயில் என்பது புலவர்கள், இசைஆர்வலர்கள், நாட்டியமாடுபவர்கள், தங்களின் திறமையை முதல் முதலில் வெளிப்படுத்தும் இடமாக இருந்தது. கோயில்கள் நாகரீகத்தின் மையமாக திகழ்ந்தது. கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெருமை வாய்ந்த கோயில் நகரமாக மதுரை திகழ்கிறது.
அத்தகைய பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க மதுரையின் தொன்மையை விளக்குகின்ற வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதைப்போன்றே தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.
கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பேசும்போது,மதுரை மாவட்ட நிர்வாகம் மாமதுரை போற்றுவோம் விழாக்குழுவிற்கு முடிந்த வரையில் அனைத்து வகையிலும் இயன்ற உதவியை செய்திருக்கிறது. இந்த மாமதுரை விழா இனிவரும் காலங்களிலும் ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ்ர்க்கும் வண்ணம் மிகப்பெரிய விழாவாக அமைய வேண்டும்;. இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கும், விழாவை நடத்திக்கொண்டிருக்கும் விழாக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மாமதுரை போற்றுவோம் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா முன்னிலை உரையாற்றினார். விழாக்குழுத்தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் ஆர்.நந்தகோபால் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், உதவி இயக்குநர் (தணிக்கை) ராஜசேகர், தேசிய தகவல் மைய அலுவலர் மைக்கேல் உள்ளிட்ட அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாக்குழுவின் துணைத்தலைவர்கள் திரு.கே.எஸ்.பரத் வரவேற்புரையாற்றினார். முடிவில் சு.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.
கண்கவர் நடனம்- மேளத்துடன் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
மதுரையில் கடந்த மூன்று நாட்களாக மதுரையை போற்றுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார ஊர்தி அணிவகுப்பு நேற்று மாலை 5 மணியளவில் மதுரை கல்லூரி மைதானத்தில் இருந்து புறப்பட்டது. இதை கவர்னர் ரோசய்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். கரகாட்ட கலைஞர்கள் முதலில் நடனம் ஆடியபடி வந்தனர். இதைதொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், குறவன்குறத்தி ஆட்டம், செண்டை மேளம், நையாண்டி மேளம், ராகமேளம் என இசைத்தபடி வந்தனர். பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இதை தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. பெரியாறு அணை, அதை கட்டிய பென்னிகுவிக் உருவ சிலையுடன் கூடிய ஊர்தி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதை போல் மதுரை சந்திப்பு என்ற தலைபில் வந்த அலங்கார ஊர்தியும் பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்தது. இந்த ஊர்தி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த அலங்கார ஊர்தி ஊர்வலம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை ரோட்டின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.