முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மக்கள், கையில் செங்கல் எடுப்பதற்குள் எய்ம்ஸ் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
Udhayanidhi 20221 02 02

Source: provided

மதுரை : பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் எய்ம்ஸ் திட்டத்தை துவங்காவிட்டால் மதுரை மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுக்கும் நிலை வரும் என மதுரையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசினார்.

மதுரையில் நேற்று தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 72 ஆயிரத்து 92 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 180 கோடியில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது, 

மதுரையின் வளர்ச்சியும், மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்து கொண்டே போவது தி.மு.க. ஆட்சியில்தான். தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறிய 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் வாட்ஸ்ஆப் மூலம் தவறான தகவலை பரப்புகின்றனர். தி.மு.க. ஆட்சியின் சாதனையை வெளியில் சொல்லாததுதான் எங்களது பலவீனம். 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டக் கோரி கடந்த தேர்தலின்போது ஒற்றை செங்கலை எடுத்தேன். ஆனால் இன்னும் கட்டவில்லை. அதற்குப் பின் கலைஞர் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படவுள்ளன. இதிலிருந்து மக்கள் நலனில் அக்கறையோடு செயல்படும் அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம்.

வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கி எய்ம்ஸ் பணிகளை தொடங்காவிட்டால் நான் செங்கலை எடுப்பதற்குமுன் மதுரை மக்கள் அனைவரும் செங்கலை எடுப்பார்கள். 

தேர்தலாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடுதான் தி.மு.க. இருக்கும். கொரோனா காலத்திலும் உங்களோடு உடனிருந்தோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் உங்களுடன் இருக்கும் தி.மு.க. அரசுக்கு எப்போதும் நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து