முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரோ லீக் ஹாக்கி தொடர்: தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்தது இந்திய ஆண்கள் அணி

வியாழக்கிழமை, 16 மார்ச் 2023      விளையாட்டு
16-Ram-50

Source: provided

ரூர்கேலா: நடப்பு புரோ லீக் ஹாக்கி தொடரில் ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள பிர்ஸா முண்டா மைதானத்தில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது இந்தியா. ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இந்த வெற்றிகளை இந்திய ஆடவர் அணி பதிவு செய்துள்ளது.

2 முறை வீழ்த்தி.... 

2022-23 FIH புரோ லீக் ஹாக்கி சீசனின் சில போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் இந்திய அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய அணியை தலா 2 முறை வீழ்த்தி அசத்தியது. நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது.

8 போட்டிகளில்... 

இதன் மூலம் நடப்பு புரோ லீக் ஹாக்கி சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இந்தியா. வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் பெல்ஜியம், பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுடன் இந்தியா இந்த சீசனுக்கான போட்டிகளில் விளையாடுகிறது. நடப்பு சீசனில் கடந்த 2022 நவம்பரில் ஸ்பெயின் அணிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

ஹர்மன்பிரீத் சிங்...

இந்த சீசனில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களில் இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங், 11 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். தமிழகத்தை சேர்ந்த கார்த்தி, 5 கோல்களை பதிவு செய்துள்ளார். அவர் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து