முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபானம் அத்தியாவசிய பொருளா? டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஐகோர்ட் கிளை கேள்வி

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      இந்தியா
Court-2023-03-23

Source: provided

விருதுநகர்: விருதுநகரில் மதுபானக்கடையை அகற்றக்கோரிய வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்காவில் அமைந்துள்ள வாகைக்குளம் என்ற கிராமத்தில் செயல்பட்டுவந்த மதுக்கடையை அகற்றக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில், மதுக்கடையை சுற்று பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்துவருவதாகவும், இதனால் மோதல் சம்பவம் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மதுபானக்கடை இருக்கக்கூடிய பகுதி சிறுவர்கள், பெண்கள் அதிகம் சென்றுவரக்கூடிய பகுதியாக உள்ளது. எனவே இந்த மதுக்கடையை அகற்றவேண்டும் எனக்கோரி இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில், மதுபானக்கடை உரிய அனுமதிபெற்று செயல்பட்டுவருவதாகவும், 20 கிலோமீட்டர் தொலைவுக்கு எந்த மதுபானக்கடைகளும் கிடையாது எனவும் கூறப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், 20 கி.மீ தொலைவிற்கு ஒரு மதுபான கடைதான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருளா?" என கேள்வியெழுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து