முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரவாரம் செய்த ரசிகர்கள்: கோபித்துக் கொண்டு சென்ற நடிகர் ஆர்யா

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      சினிமா
Arya 2023-05-30

Source: provided

சேலம் : ஆரவாரம் செய்த ரசிகர்களால்  நடிகர் ஆர்யா  கோபித்துக் கொண்டு சென்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி நடிக்கும் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் ஜூன் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளது. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நடிகர் ஆர்யா, காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் விளம்பரத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தித்து வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக  சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி  ஆகியோர் வருவதாக தகவல் தெரிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த வணிக வளாகத்தில் குவிந்தனர். 

தொடர்ந்து வந்த நடிகர் ஆர்யா, மேடையின் மீது ஏறி திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டார். தொடர்ந்து,  ரசிகர்களிடையே பேசிக் கொண்டிருந்தார் அப்பொழுது ஏராளமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முற்பட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்குகளும், ரசிகர்கள் மீது சரிந்து விழுந்தது. பாதுகாவலர்களை தாண்டி மேடையில் ஏறிய ரசிகர்களால் கோபமடைந்த நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி உடனடியாக மேடை விட்டு இறங்கி சென்றனர்.

இதை அறியாத ரசிகர்கள் சிலர், மீண்டும் ஆர்யா வருவார் என்று சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தனர். ஆனால்  அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து