முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொது செயலாளர் எடப்பாடி அறிவிப்பு

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      அரசியல்
EPS 2023 03 27

சென்னை, அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு சட்டமன்ற தொகுதிகளை பிரித்து, புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி கன்னியாகுமரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் மாநில பொறுப்புகளுக்கும், கட்சியின் பிற அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஜி.பாஸ்கரன், அன்வர் ராஜா, ஆர். மனோகரன், வி. ராமு, ராயபுரம் மனோ, துரை செந்தில் உள்ளிட்டோர் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து