முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      தமிழகம்
Udayanidhi 2023-02-20

Source: provided

சென்னை : தமிழக அரசு கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ், நான் முதல்வன் ஒலிம்பியாட் என்ற திட்டத்தை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இது குறித்து அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் திறனை பரிசோதிக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்ட தொடக்க விழா சென்னை திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி பள்ளியில் நடந்தது. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில் மொழித்திறன், கணிதத் திறன், சிந்திக்கும் ஆற்றல் உள்ளிட்டவற்றின் கீழ் கையடக்க கணினி வழியே 50 மதிப்பெண்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களின் திறனை அறிந்து அதில் மாணவர்களை மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் இந்த ஒலிம்பியாட் திட்டம் பரிசோதனை முயற்சியாக திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 18 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து