எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
உருளைக்கிழங்கு சிக்கன் லெக் ஃப்ரை
Cooking time in minutes:
20
Ingredients:
உருளைக்கிழங்கு சிக்கன் லெக் ஃப்ரை செய்யத்தேவையான பொருட்கள்.
- சிக்கன் லெக் பீஸ் – 9.
- உருளைக்கிழங்கு - 5.
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
- மிளகு தூள் – - 2 ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்.
- சீஸ் -150 கிராம்.
- மல்லி இலை - சிறிதளவு.
- புதினா இலை - சிறிதளவு.
- முட்டை - 3.
- பிரட் கிரம்ஸ் - 150 கிராம்.
- மைதா மாவு - 150 கிராம்.
- எண்ணெய் – 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;--
- அடுப்பில் குக்கரை வைத்து சுத்தம் செய்த 9 லெக் பீஸ் சிக்கனை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி போட்டு மூடி 10 நிமிடம் சிக்கனை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
- வேக வைத்த லெக் பீஸ் சிக்கனை எடுத்து அதில் உள்ள எலும்பு தனியாகவும்,கறி தனியாகவும் பிரித்து எடுத்து சிக்கனை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்,எலும்பை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கிய 5 உருளைக்கிழங்கை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி போட்டு மூடி 5 விசில் வரும் வரை நன்றாக வேக வைக்கவும்.
- வேக வைத்த உருளைக்கிழங்கில் உள்ள நீரை வடி கட்டி விட்டு உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்,தேவையான அளவு உப்பு,துருவிய 150 கிராம் சீஸ் மற்றும் நறுக்கி வைத்துள்ள சிக்கனைபோட்டு நன்றாக கலந்து விட்டு சிக்கனை சிறு உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- சிக்கன் உருண்டையை லேசாக தட்டி நடுவில் லெக் பீசில் இருந்து எடுத்த எலும்பை வைத்து முடி சிக்கன் லெக் பீஸ் போல் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பவுலில் 3 முட்டையை உடைத்து ஊற்றவும்.
- இதனுடன் 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்,மிளகு தூள் 1/2 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் 150 கிராம் பிரட் கிரம்ஸ்சை எடுத்துக் கொள்ளவும்.
- இன்னொரு தட்டில் 150 கிராம் மைதா மாவை எடுத்துக் கொள்ளவும்.
- தயார் செய்து வைத்துள்ள சிக்கனை மைதா மாவில் பிரட்டி எடுத்து பின்னர் முட்டை கலவையில் முக்கி எடுத்து பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு லெக் பீஸ் சிக்கன் துண்டின் எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள லெக் பீஸ் சிக்கன் துண்டுகளையும் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கனை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான உருளைக்கிழங்கு சிக்கன் லெக் ஃப்ரை ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


