முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல திரைப்பட இயக்குனர் 'பசி' துரை காலமானார்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      சினிமா
Durai 2024-04-22

Source: provided

சென்னை : பிரபல திரைப்பட இயக்குனர் துரை நேற்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற 'பசி' திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 

இயக்குநர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய 'பசி' திரைப்படத்திற்கு  1979-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 

சென்னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனர் , திரைப்படம், நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை குவித்த திரைப்படம் பசி. 

ஜெயபாரதி, கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை. அவர் இயக்கிய அவளும் பெண்தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவைகளாகும். இயக்குநர் துரை மறைவிற்கு தமிழ் திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து