முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
India-Meteorological 2022

Source: provided

புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்று ஏற்கனவே கணிப்புகள் வெளிவந்தன. இதையடுத்து மே மாதம் 19-ம் தேதி(நேற்று) தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

அதன்படி, மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே போல தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து