முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் வாக்களிக்காத முன்னாள் மத்திய அமைச்சருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      அரசியல்
Jayant-Sinha 2024 05 21

 புது டெல்லி, ஹசரிபாக் தொகுதியில் கட்சிப் பணியில் ஈடுபடாத மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாத முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு பா.ஜ.க. நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா. இவர் மோடி அரசில் அமைச்சராக இருந்தார்.  ஹசரிபாக் தொகுதி எம்.பி. ஆகவும் இருந்தார். மேலும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் இருந்து விடுவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அந்த தொகுதியில் மணீஷ் ஜெய்ஸ்வால் என்பவரை வேட்பாளராக பா.ஜ.க.  அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தொகுதியில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்ற கூட்டத்திற்கு வந்த ஜெயந்த் சின்ஹா மகன் ஆஷிஸ் சின்ஹா காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார். 5-வது கட்டமாக நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் ஜெயந்த் சின்ஹா ஓட்டுப் போடவில்லை.

இந்நிலையில், அவருக்கு பா.ஜ.க. மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

தேர்தலில் ஓட்டுக்கூட போடவில்லை. கட்சி சார்ந்த பணிகளில் ஆர்வம் காட்டாததுடன், தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளவில்லை.   இது குறித்து 2 நாட்களில் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து