முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியட்நாமின் புதிய அதிபராக டோலாம் பதவியேற்றார்

புதன்கிழமை, 22 மே 2024      உலகம்
Vietnam 2024-05-22

ஹனோய், வியட்நாமின் புதிய அதிபராக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் நேற்று பதவியேற்றுக் கொண்டார்

முந்தைய அதிபர் வோ வான் துவோங் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி விலகினார். முக்கிய அரசாங்க உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்த நிலையில் இந்த ஊழல் விவகாரம் வியட்நாம் அரசியலில் பூதாகரமாக வெடித்தது. 

ஊழல் தடுப்பு குழுவின் துணைத் தலைவராக தற்போது அதிபராக பதவியேற்றுள்ள டோ லாம் இருந்த நிலையில் தனது அரசியல் போட்டியாளர்களை வீழ்த்துவதற்காக இந்த ஊழல் விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது.  

தனது பதவியேற்பின் போது உரையாற்றிய டோ லாம் கூறுகையில்,  ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்குத்  தான் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்தார். 

66 வயதான டோ லாம், கடந்த 2016-ம் ஆண்டு முதல் பொது பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார். மேலும் வியட்நாம் மனித உரிமை இயக்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவார். 

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில், வியட்நாம் நான்கு நபர்களைக் கொண்ட தலைமைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது, அதில் அதிபர், பிரதம மந்திரி மற்றும் தேசிய சட்டமன்றத்தின் தலைவர் ஆகியோர் அடங்குவர். அதிபரை அரசுப் பிரதிநிதிகளின் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

முன்னதாக முந்தைய அதிபர் வோ வான் துவோங் அதிபராகி ஒரு வருடமே பதவியிலிருந்த நிலையில் ஊழலுக்காகத் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் வலுவாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அவரைத்தொடர்ந்து தேசிய சட்டமன்றத் தலைவரும் கடந்த மாதம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து