முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தி.மு.க. தலைவராக கனிமொழி நியமனம்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      தமிழகம்
Kanimozhi 2023-10-13

Source: provided

சென்னை : பாராளுமன்ற திமுக குழு தலைவராக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் மக்களவை - மாநிலங்களவை ஆகிய இரு அவைகளுக்கும் சேர்த்து திமுக பாராளுமன்ற குழு தலைவராக கனிமொழி செயல்படவுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்களவைக் குழு தலைவராக, பொருளாளர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைக்குழு துணைத்தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் நியமனம். மக்களவை கொறடாவாக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா நியமனம். மாநிலங்களவைக்குழு தலைவராக கொள்கை பரப்புச்செயலாளர் திருச்சி சிவா, மாநிலங்களவைக்குழு துணைத்தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக சட்டத் தலைமை ஆலோசகர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து