எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, ஜூலை. 21 - பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ஏற்க முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதேபோல் மோடிக்கு அன்னா ஹசாரேவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. இவ்வளவு நாட்களாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பற்றி பேசாத காங்கிரஸ் தலைவர்கள் இப்போது அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
காங்கிரசும், நரேந்திர மோடியும் மக்களை ஏமாற்றும் வகையில் நாடகமாடுகின்றனர். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக காங்கிரசும் மோடியும் உள்ளனர். நரேந்திர மோடியின் பேச்சுக்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
நாட்டை வழி நடத்த முன் வரும் தலைவர் எல்லா தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும். அந்த வகையில் நரேந்திர மோடிக்கு பிரதமர் வேட்பாளருக்கான தகுதி இல்லை என்றார் அவர்.
இதனிடையே மோடி மதச்சார்பற்றவர் என்று தாம் ஒருபோதும் புகழாரம் சூட்டவில்லை என்றும் அப்படிச் சொல்வதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லையே என்றும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு தலைமை ஏற்றால் நிச்சயமாக அது மதவாத சக்தியாகத்தான் இருக்கும். மோடியா? ராகுல் காந்தியா? யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


