முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன்: எலான் மஸ்க் சபதம்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      உலகம்
Elon-Musk 2023 03 28

வாஷிங்டன், அமெரிக்க முன்னணி செய்தித்தாளில் வந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்த எலான் மஸ்க், ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன் என்று  சபதம் மேற்கொண்டுள்ளார். 

உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது வித்தியாசமான கருத்துகள் வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறுவது வாடிக்கை. தனது கருத்துகளை வித்தியாசமாகவும், துணிவாகவும் முன்வைக்கக் கூடியவர்.

இந்த நிலையில் அவர், ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிடுவதில்லை என்று சபதம் எடுத்துள்ளார். அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சமீபத்தில் ஒரு ராக்கெட்டை ஏவியது. அப்போது ஏவுதளத்தின் அருகே சில பறவைகளின் கூடுகளும், முட்டைகளும் சேதம் அடைந்தது. 

இது குறித்து அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள், ஸ்பேஸ்எக்ஸ் தளத்தால் வனவிலங்கு பாதுகாப்பு பின்னுக்கு தள்ளப்படுகிறது என்று தலைப்பிட்டு முதல்பக்க செய்தியாக வெளியிட்டு இருந்தது. 

அதில் ராக்கெட் ஏவுதலின்போது 9 பறவைக் கூடுகளும், முட்டைகளும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. முட்டைகள் சேதமடைந்த படங்களும் வெளியிடப்பட்டு இருந்தன. இதுகுறித்து எலான்மஸ்க் தனது நிறுவனத்தின் தவறுகளுக்கு வருந்துவதுபோல பதிலளித்து ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து