முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன் சந்திப்பு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      இந்தியா
Hemant-Soran 2023-07-23

புதுடெல்லி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதல்வராக பதவி வகித்து வந்தநிலையில், அவர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

முன்னதாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்வரானார்.  சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு கடந்த மாதம் 28-ம்தேதி ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் மீண்டும் அம்மாநில முதல்வராக பதிவியேற்றார்.

இந்நிலையில், முதல்வராக பதவியேற்ற பிறகு டெல்லி சென்றுள்ள ஹேமந்த் சோரன் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, ஜார்க்கண்ட் மாநில பிரச்சினைகள் குறித்தும் மத்திய நிதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை முதல் முறையாக ஹேமந்த் சோரன் சந்தித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் ஹேமந்த் சோரனும் அவரது மனைவியும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து