Idhayam Matrimony

ட்ரம்பின் உயிரை காப்பாற்றியது கடவுள் ஜெகந்நாதர்: இஸ்கான்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      உலகம்
Joe-Biden 2024-07-14

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் உயிரை காப்பாற்றியது கடவுள் ஜெகந்நாதர்தான் இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடவுள் ஜெகந்நாதரின் அருளால் தான் சிறு காயங்களுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் உயிர் தப்பினார் என்று "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON) தெரிவித்துள்ளது. 48 ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் நடந்த ஜெகந்நாதரின் முதல் ரத யாத்திரையில் பக்தர்களுக்கு ட்ரம்ப் உதவி செய்தார். தற்போது ஜெகந்நாதரின் 9 ஆவது ரத யாத்திரை நடைபெறவுள்ள நிலையில், அதன் பிரதிபலனாக தற்போது ட்ரம்பின் உயிரை ஜெகந்நாதர் காப்பற்றியுள்ளார்" என்று இஸ்கான் செய்தித் தொடர்பாளர் ராதாரமன் தாஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து