முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      இந்தியா
Kejriwal 2023 04 14

புதுடெல்லி, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்.

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிபிஐ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ மற்றும் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆகியோர்  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனித்தனி மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

ஆம் ஆத்மி தலைவரை ஜூன் 26ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல்வரைக் கைது செய்ததை சட்டப்பூர்வமாக உறுதி செய்தது. மேலும் சிபிஐ செய்த செயல்களில் எந்தவிதமான  இல்லை என்று கூறியது. டெல்லி துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து, 2022ல் மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, கலால் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் மற்றும் உரிமதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன. இதனடிப்படையில் ஆம் ஆத்மியில் முதல்வர் உள்ளிட்ட சிலரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து