முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதி போட்டியுடன் ஓய்வு: பிரபல வீரர் நடால் அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      விளையாட்டு
10-Ram-50

Source: provided

பாரீஸ்: 38 வயதாகும் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் வரும் டேவிஸ் கோப்பையுடன் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.அடுத்த மாதம் தனது சொந்த நாடான ஸ்பெயினில் நடைபெறும் டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

22 கிராண்ட்ஸ்லாம்... 

22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் ரஃபேல் நடால். ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் இவர்களுடன் சேர்த்து டென்னிஸ் உலகில் பிக் த்ரீ என்று அழைக்கப்படுகிறார். தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் ஜோகோவிச்சிடம் 2-வது சுற்றில் தோல்வியுற்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் அல்கராஸுடன் சேர்ந்து காலிறுதிக்கு முன்னேறினார். அதிலும் தோல்வியுற்றதால் பின்னர் டென்னிஸ் போட்டிகளில் விளையாடாமலே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக... 

கடந்த 2 ஆண்டுகளாகவே காயம் காரணமாக ரஃபேல் நடால் பிரச்னைகளை சந்தித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: உண்மையை சொல்லவேண்டுமானால் கடந்த 2 ஆண்டுகள் மிகவும் சிறமப்பட்டேன். என்னால் கட்டுப்பாடு இல்லாமல் விளையாட முடியுமென நினைக்கவில்லை. இந்த முடிவை எடுப்பது கடினம்தான். ஆனால், வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் தொடக்கமும் முடிவும் இருக்கிறது.

தொழில்முறை போட்டி...

டேவிஸ் கோப்பையில் விளையாடும்போது ஒரு முழுமையான வட்டத்தை அடைவது போலிருக்கிறது. 2004இல் டேவிஸ் கோப்பைதான் எனது தொழில்முறை டென்னிஸின் மகிழ்ச்சி தொடங்கியது. எனது நாட்டுக்காக எனது கடைசி போட்டியை விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை நான் அடைந்ததெல்லாம் கனவு நனவாகியதுபோல்தான் இருக்கிறது. எனது சிறந்தவற்றை என்னால் முடிந்தளவுக்கு கொடுத்த மன நிம்மதி இருக்கிறது. நான் நினைத்ததைவிடவும் வெற்றிகரமாக விளையாடியுள்ளேன். இதுதான் ஓய்வை அறிவிக்க சரியான நேரமெனக் கருதுகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து