முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரியில் அலைமோதிய கூட்டம்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      தமிழகம்
Kumai-1 2024-05-06

Source: provided

கன்னியாகுமரி : விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேற்று அதிகரித்து காணப்பட்டது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்நிலையில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக படகு சவாரி செய்ய, சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சுமார் 3 மணி நேரம் காத்திருந்து படகு பயணம் செய்த சுற்றுலா பயணிகள், முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட இடங்களை கண்டு களித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து