முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

60 வயதிற்கு மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

திருப்பதி, மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையில் வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

 உலக பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பாதயாத்திரை மூலம் வந்தடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பிரசசனைகள் உடையவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை மூலம் வர வேண்டாம்.

மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால், உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் இதய நோய்க்காரர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வது நல்லதல்ல. ஆகவே அவர்கள் வாகனங்களில் வந்து தரிசனம் செய்யலாம். 

பாத யாத்திரிகையாக வருவோருக்காக அலிபிரி மலைப் பாதையில் 1500-வது படி மற்றும் காலி கோபுரம், பாஷ்யகர்லா சன்னதி அருகே மருத்துவ உதவி மையம் உள்ளது. திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து