முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      தமிழகம்
Landslide 2024-12-04

Source: provided

தி.மலை : திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன.

திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக 2 நாட்களுக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கியது. இதனால் அண்ணாமலையார் மலையில் வ.உ.சி.நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன. அதன் காரணமாக பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து அருவிபோல ஆக்ரோஷமாக வ.உ.சி.நகர் வீடுகளை நோக்கி பொலபொலவென சரிந்ததில் 2 வீடுகளுக்குள் புகுந்து அந்த வீடுகளே மண்ணுக்குள் புதைந்தன. அப்போது ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். மற்றொரு வீடு கண் இமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கியது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறுதியில் மண்ணில் புதைந்த 7 பேரும் சடலமாகவே மீட்கப்பட்டனர்.  இதையடுத்து 7 பேரின் உடல்களுக்கும் உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்தனர். பின்னர் 7 இறுதி ஊர்வல வாகனங்களில் அவர்களின் உடல்கள் தனித்தனியாக வைக்கப்பட்டு அருகில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாலை ஓரத்தில் நின்றிந்த மக்கள் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து 7 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து