எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கொல்கத்தா : லக்னோ ஐ.பி.எல். அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் டி-20 தொடர்...
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் 24, 25-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
ரூ. 27 கோடிக்கு ஏலம்
இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை ரூ. 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற வரலாற்று சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை டெல்லி வாங்கியது. கே.எல். ராகுலை கழற்றி விடும் முன்பே லக்னோ அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால், ஏலத்தில் ரிஷப் பண்டை வாங்கியதன் மூலம் அவரை லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |