முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபைக்கு விடுமுறை: மீண்டும் மானியக்கோரிக்கை மீது விவாதம் 24-ம் தேதி தொடக்கம்

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : தமிழக சட்டசபை வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது. மீண்டும் மானியக்கோரிக்கை மீது விவாதம் 24-ம் தேதி தொடங்குகிறது.

தமிழக பட்ஜெட் கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் 15-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. விவாதத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பதில் அளித்து பேசினர். சட்டசபைக்கு நேற்றும் (சனிக்கிழமை), இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாகும்.

திங்கட்கிழமை சட்டசபை மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கேள்வி நேரமும், அதனை தொடர்ந்து மானியக்கோரிக்கை மீதான விவாதமும் நடக்க இருக்கிறது. அதன்படி முதல் மானியக்கோரிக்கையாக நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை இடம் பெறுகிறது. இதில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசுகின்றனர். உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகு, அமைச்சர் துரைமுருகன் பதில் உரையும், துறை சார்ந்த அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து