முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      இந்தியா
Amarnath

புதுடில்லி, 2025-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.

தெற்கு காஷ்மீரில் உள்ள 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலுக்கு 52 நாள் புனித யாத்திரை ஜூலை 3 அன்று தொடங்கி ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடையும் என்று அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்துள்ளது.

அமர்நாத் யாத்திரை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்புக் குழுக்கள் சிறப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் குகையை அடைய இரண்டு மலையேற்றப் பாதைகள் உள்ளன. பால்டால் வழியாக குறுகிய  பாதை, ஸ்ரீநகர் வழியாகச் செல்லும் பாரம்பரிய வழிகள் என இரண்டு வழியாக பக்தர்கள் செல்கிறனர். இந்த இரண்டு வழிகளிலும் முக்கியமாக இடங்களில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வீரர்கள் நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.

யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், நேற்று காலை முதல் ரெஹாரி கிளையில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் திரளானோர் பதிவு செய்து வருகின்றனர். யாத்திரை மேற்கொள்ள விரும்புபவர்கள் அனைவரும் பதிவு செய்வது அவசியமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து