Idhayam Matrimony

டிரம்ப் அச்சுறுத்தல்களுக்கு இடையே கனடாவில் ஆட்சியை பிடித்தது லிபரல் கட்சி

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      உலகம்
Canana-PM-2025-04-29

ஒட்டாவா,  கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. 

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியதற்கு எதிராக லிபரல் கட்சி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் அதற்கு கை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. வரி, இணைப்பு அச்சுற்றுத்தல்களுக்கு இடையே கிடைக்கப் பெற்ற இந்த வெற்றியை பிரதமர் மார்க் கார்னி உற்சாகம் பொங்க வரவேற்றுள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு வெற்றிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “தேர்தல் முடிவுகள், கனடாவை ஆதரிக்கவும் அதனை வலுவாகக் கட்டியெழுப்பவும் மக்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். வரவிருக்கும் நாட்களும் மாதங்களும் சவாலானதாக இருக்கும். அவை சில தியாகங்களை கோரும். ஆனால் எங்கள் தொழிலாளர்களையும் எங்கள் வணிகங்களையும் ஆதரிப்பதன் மூலம் அந்த தியாகங்களைப் பகிர்ந்து கொள்வோம். அமெரிக்க துரோகத்தின் பாடங்களை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம்.” என்று வலியுறுத்தினார்.

தொழிலதிபரும் வங்கியாளருமான மார்க் கார்னி, இந்த தேர்தலில் ட்ரம்ப் விடுத்த இணைப்பு கோரிக்கைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ட்ரம்ப் கூறியது நிஜமாகும் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார்.  டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்தை மையப்படுத்தி அவர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் அவருக்கு கை கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து