முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.எம்.களில் பணம் இருக்க வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      இந்தியா      வர்த்தகம்
ATM-Card 2023-09-09

டெல்லி, மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகளுக்கு திண்டாட வேண்டியுள்ளது. அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

வங்கி ஏ.டி.எம்.களில் 500 ரூபாய் நோட்டுகள்தான் பெரும்பாலும் வைக்கப்படுகின்றன. இதனால் மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகளுக்கு திண்டாட வேண்டியுள்ளது. எனவே இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது. 

அந்தவகையில் 75 சதவீத ஏ.டி.எம்.களில் வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது மேற்படி நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து