முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

வியாழக்கிழமை, 1 மே 2025      உலகம்
Pakis

Source: provided

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினட் ஜெனரல் முகம்மது அசிம் மாலிக்கை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. அதே வேலையில் அவர் இன்டர் சர்வீஸ் இன்டலிஜன்ஸ் (ஐஎஸ்ஐ) தலைவராகவும் தொடர்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் பஹஸ்காமில் நடந்த பயங்ரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியாவின் சாத்தியமான எதிர்வினை குறித்த கவலைகளுக்கு மத்தியில் இது நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் அமைச்சரவை பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முகம்மது அசிம் மாலிக்கிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை பொறுப்பு முறையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. அதில், லெப்டினென்ட் ஜெனரல் முகம்மது அசிம் மாலிக் ஹெச்ஐ (எம்), டிஜி (ஐ) தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பொறுப்பை கூடுதலாக உடனடியாக வகிப்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 செப்டம்பரில் அசிம் மாஸிக் ஐஎஸ்ஐ-ன் தலைவராக நியமிக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையை நிபுணர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, தனது புதிய பதவியின் மூலம், தேசிய பாதுகாப்பு கொள்கைகளை வடிவமைப்பதில் அசிம் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிபுணர்களின் கருத்துக்கள் படி, ஐஎஸ்ஐ தலைவர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பாத்திரங்களை இணைப்பது ராணுவ உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு கொள்கை உருவாக்கத்தில் ஒருங்கிணைப்பை உருவாக்க முடியும். அசிம் மாலிக், பாகிஸ்தானின் 10வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராவார். ஆனால், ஒரேநேரத்தில் நாட்டின் முக்கியமான இரண்டு பணிகளின் பொறுப்பை ஐஎஸ்ஐ தலைவர் வசம் ஒப்படைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தானில், தெஹ்ரீக் - இ - இன்சாப் அரசு கடந்த ஏப்.2022- வெளியேற்றப்பட்டதில் இருந்து தேசிய ஆலோசகர் பொறுப்பு காலியாக இருந்தது. அப்போது, முயீத் யுசுஃப் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பு வகித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து