முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகை சுதந்திர தினம்: பா.ஜ.க. மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சனிக்கிழமை, 3 மே 2025      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரைக்கும் உரிமைக்கானதாக ஆகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம் 151 என படுபாதாளத்தில் உள்ளது. காரணம் என்ன? ஏனென்றால், மத்திய பாஜக ஆட்சி கேள்விகளைக் கண்டாலே அஞ்சுகிறது. ஊடக அலுவலகங்களில் ரெய்டு நடத்துகிறது, செய்தியாளர்களைச் சிறையில் தள்ளுகிறது, பாஜக அரசின் ஊழல்கள், உரிமை மீறல்கள் மற்றும் பெரும்பான்மைவாதப் போக்கை அம்பலப்படுத்துவோர்களை அடக்குகிறது.

உலக பத்திரிகை சுதந்திர நாளான இன்று (நேற்று), யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லையென்றால் மக்களாட்சி இருளில் மாண்டு விடும் என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வோம். அதனால்தான், பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரைக்கும் உரிமைக்கானதாக ஆகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து