முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்

சனிக்கிழமை, 3 மே 2025      சினிமா
Vijay-Deverakonda-2025-05-0

சென்னை, ‘ரெட்ரோ’ படவிழாவில் தான் பேசியது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கமளித்துள்ளார்.

நடிகர் சூரியாவின் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் விழா தெலங்கானாவின் ஹைதரபாதில் நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா  பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, பழங்குடியின மக்களுடன் ஒப்பிட்டு  பேசியதாகக் கூறி அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் புகாரளித்துள்ளார்.

இந்நிலையில்,  இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா  கூறியதாவது:

எந்தவொரு சமூகத்தையும் குறிவைத்து புண்படுத்துவது எனது நோக்கமில்லை. முக்கியமாக பட்டியலின பழங்குடியின மக்களை. அவர்கள் மீது நான் அளவுக்கடந்த மரியாதை வைத்துள்ளதுடன், அவர்களை நம் நாட்டின் ஓர் முக்கிய அங்கமாக நான் கருதுகிறேன். ‘டிரைப்’ (பழங்குடியினர்) என நான் குறிப்பிட்ட வார்த்தையானது, பல நூறாண்டுகளுக்கு முன்பு தனித்தனி இனக்குழுக்களாக இருந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்ட மனிதர்களைக் குறிக்க வரலாறு, அகராதி ரீதியான அர்த்ததில் மட்டுமே பயன்படுத்தினேன். ஆனால், அது பழங்குடியின மக்களைக் குறிக்க 20-ம் நூற்றாண்டின் இடையில் அறிமுகப்படுத்தப்பட்டு 100 ஆண்டுகள் கூட முழுமையடையாத ‘ ஷெடியூல்டு டிரைப்’ (பட்டியலின பழங்குடிகள்) -ஐ குறித்தானது அல்ல.

நான் பேசிய கருத்தில் ஏதேனும் தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டிருந்தாலோ அல்லது யாரேனும் காயப்பட்டிருந்தாலோ அதற்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.  என அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அவர் மீது ஹைதரபாதின் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து