முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப்பாகவே மாறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் : ஏ.ஐ. புகைப்படத்தால் சர்ச்சை

சனிக்கிழமை, 3 மே 2025      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன் : போப்பாகவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மாற்றிய டிரம்ப் புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்தது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு வரும் 7ம் தேதி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் மாநாடு தொடங்க இருக்கிறது. இதற்காக வாடிகன் சிஸ்டைன் சிற்றாலயத்தில் 7-ந் தேதி கூடி தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்கிறார்கள்.

இதனிடையே ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். இந்த சூழலில், புதிய போப் தேர்வு குறித்து நகைச்சுவையாகப் பேசி இருந்தார். முன்னதாக கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த அவரது கருத்து கேட்கப்பட்டதற்கு டிரம்ப், "நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்.. அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்" என்றார். மேலும் போப் பிரான்சிஸுக்குப் பதிலாக யார் இருக்க வேண்டும் என்று கேட்டபோது, பதில் அளித்த டிரம்ப், நியூயார்க் வெளியே இருக்கும் ஒரு கார்டினல் எங்களிடம் இருக்கிறார், அவர் மிகவும் நல்லவர், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப் ஆண்டவர் போல் உள்ள ஏ.ஐ. புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், டிரம்ப்பின் இந்த புகைப்படம் போப் ஆண்டவரையும், புதிய போப் தேர்வு செய்யும் நடைமுறையையும் அவமதிப்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதனால் இந்த புகைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து