முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்து நதியில் அணை காட்டினால் இடிப்போம்: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்

சனிக்கிழமை, 3 மே 2025      உலகம்
Khawaja-Muhammad-Asif-2025-

இஸ்லாமாபாத், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத் தாக்குவோம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அமைச்சர் கவாஜா அசிப் அளித்த பேட்டியில், "சிந்து நதியில் புதிதாக எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது, இந்தியாவின் ஆக்கிரமிப்பாக பார்க்கப்படும். அவர்கள் சிந்து நதியில் ஏதாவது கட்டமைப்பைக் கட்ட முயன்றால், அதனை நாங்கள் கட்டாயம் தாக்குவோம். ஆக்கிரமிப்பு என்பது பீரங்கியாலோ துப்பாக்கியாலோ சுடுவது மட்டுமில்லை; அதற்கு பல முகங்கள் உள்ளன. தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதோ, திசைத் திருப்பி விடுவதோ அதில் ஒன்று. இது தாகம், பட்டினி மரணங்களுக்கு வழிவகுக்கும்.

நாங்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எடுத்துச் சொல்வோம். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது இந்தியாவுக்கு எளிதல்ல. சம்பந்தப்பட்டவர்களை பாகிஸ்தான் அணுகும்" என்று தெரிவித்தார். மேலும், இந்தியா தொடர்ந்து தூண்டிவிடும் வேலையைச் செய்கிறது என்று குற்றம்சாட்டிய பாகிஸ்தான் அமைச்சர், ”பாகிஸ்தான் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே எடுக்கும்” என்றார்.

இதனிடையே, காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தியது, வாகா எல்லையை மூடியது, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து