முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு இன்று 'நீட்' நுழைவு தேர்வு

சனிக்கிழமை, 3 மே 2025      இந்தியா
Neet 2023-04-13

புதுடெல்லி, நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான 'நீட்' நுழைவு தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும்  23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1½ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1½ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட 7 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.  சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் உள்பட மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்திருக்கிறது. மாணவர்கள், கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதற்கிடையே நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

* தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (hall ticket) https://neet.nta.nic.in/ என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமங்கள் என்றால் 011 40759000 அல்லது 011 69227700 என்ற தொலைபேசி எண்கள், [email protected] என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

* தேர்வு நாளன்று, தேர்வர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேர்வு நேர அட்டவணையை பின்பற்ற வேண்டும். சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருவது அவசியம்.

•ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப எளிமையான, வசதியான ஆடைகளை அணிய வேண்டும். தேவையற்ற தாமதங்கள், தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் எந்த ஆடை அல்லது ஆபரணங்களை தவிர்க்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட ஆடை நடைமுறைகள் (ஆண்-பெண்);

* வெளிர்நிற அரைக்கை சட்டைகள், டி சர்ட்டுகள்(பெரிய பொத்தான்கள்,எம்பிராய்டரி கூடாது).

* எளிமையான கால் சட்டைகள் 

* மெல்லிய காலணிகள்

அனுமதிக்கப்படாத ஆடை நடைமுறைகள் (ஆண்);

* முழு கைச்சட்டைகள் அணியக்கூடாது.

* பெரிய பொத்தான்கள் கொண்ட பைகள், ஆடைகள்.

•ஷுக்கள்.

•கடிகாரங்கள், வளையல்கள்,சங்கிலிகள், குளிர் கண்ணாடிகள்(சன் கிளாஸ்) போன்ற எந்த ஆபரணங்கள்.

அனுமதிக்கப்படாத ஆடை நடைமுறைகள் (பெண்);

* ஆபரணங்கள், அலங்காரங்கள் இல்லாமல் லேசான, எளிய மற்றும் வசதியான ஆடைகளை அணிந்து வர வேண்டும்.

 

* விரிவான வடிவமைப்புகள் இல்லாத வெளிர் நிற அரைக்கை குர்திகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து