முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதலாக 25 லட்சம் ரூபாய் நிவாரணம்

சனிக்கிழமை, 14 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-3

Source: provided

காந்திநகர் : விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 3 நாட்களுக்கு முன் மதியம் 1.39 மணியளவில் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்கள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 274 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிறுவனமான டாடா குழுமம் நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1.25 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து