முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி

சனிக்கிழமை, 14 ஜூன் 2025      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

Source: provided

திருச்சி : வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பேரணி நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் தொடங்கி, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளும், பிரம்மாண்ட பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக பேரணி தொடர்பாக திருமாவளவன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், வி.சி.க. துணைப் பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ் பாலாஜி உள்ளிட்ட கட்சி மேலிட பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணியின்போது வி.சி.க. தலைவர் திருமாவளவன் திறந்த வாகனத்தின் மீது பயணித்தார். அப்போது அவர் தொண்டர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். வி.சி.க துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு உள்ளிட்டோர் களப்பணியில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து