முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி - ஒரு டிரா: ஆதிக்கம் செலுத்தும் பவுமா

சனிக்கிழமை, 14 ஜூன் 2025      விளையாட்டு
South-Africa 2023-12-24

Source: provided

லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

சாம்பியன் பட்டம்...

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம், 27 ஆண்டுகளில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

பலரும் கேப்டனாக...

பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தென்னாப்பிரிக்க அணி பல ஏமாற்றங்களை சந்தித்து வந்த நிலையில், அதற்கு முற்று புள்ளி வைத்துள்ளார் கேப்டன் டெம்பா பவுமா. தென்னாப்பிரிக்க அணிக்கு பலரும் கேப்டனாக செயல்பட்டுள்ளபோதிலும், கோப்பையை வெல்லும் கனவை பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி நனவாக்கியுள்ளது.

9 வெற்றிகள் - 1 டிரா...

இந்த வெற்றியின் மூலம், கேப்டன் டெம்பா பவுமா டெஸ்ட் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து பவுமா 10 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். அதில் 9 வெற்றிகள் மற்றும் ஒரு டிரா அடங்கும். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே காணாத கேப்டனாக அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து