முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதி ஏற்படாவிட்டால் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் : அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      உலகம்
Trump-2025-02-19

Source: provided

நியூயார்க் : ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இந்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம். அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டன. ஈரானை தாக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒரு குழுவாக செயல்பாட்டோம். ஈரானின் அணு சக்தி செறிவூட்டல் திறனை நிறுத்தவும், அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்தவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஈரானுக்கு அமைதி அல்லது சோகம் ஆகிய வற்றில் ஒன்றில் ஒரு தேர்வு மட்டுமே உள்ளது. மத்திய கிழக்கு பகுதியை கொடுமைப்படுத்தும் நபராக ஈரான் உள்ளது. அந்த நாடு அமைதியை ஏற்படுத்தவில்லை என்றால் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும்.

கடந்த 8 நாட்களில் நாம் கண்டதை விட மிகப்பெரிய அமைதி ஏற்படும் அல்லது ஈரானுக்கு மிகப்பெரிய சோகம் ஏற்படும். இன்னும் பல இலக்குகள் குறி வைக்கப்பட்டு உள்ளன. அமைதி விரைவாக வரவில்லை என்றால் மற்ற இலக்குகளை துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் நாங்கள் தாக்குவோம்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து