முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல்: அதிபர் ட்ரம்புக்கு நெதன்யாகு நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      உலகம்
Benjamin 2023 07-23

Source: provided

டெல் அவிவ் : ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தலைமை "மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் செழிப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வரலாற்றின் ஒரு மையப்புள்ளியை உருவாக்கியுள்ளது என்று கூறிய நெதன்யாகு தாக்குதல் முடிந்தவுடன் அதிபர் டிரம்பிடம் இருந்து தனக்கு உடனடியாக அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.

ஆபரேஷன் ரைசிங் லயன், இஸ்ரேல் உண்மையிலேயே அற்புதமான காரியங்களைச் செய்துள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையில், அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது," என்று நெதன்யாகு சிலாகித்தார்.

இந்திய நேரப்படி நேற்று அதிகாலையில், அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணுசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து