முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் தாக்குதல் அச்சம் : நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      உலகம்
America 2024-04-22

Source: provided

அமெரிக்கா : அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.

அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.

இந்த நகரங்களில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகரின் மத, கலாச்சார மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மத்திய படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளது.

வாஷிங்டன் டிசியின் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணித்து வருவதாகவும், குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றாலும், மத தளங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார். தற்போது நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து