முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரில் 2 வாரங்களில் 7 மாவோயிஸ்டுகள் படுகொலை

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      இந்தியா
Nakselit

Source: provided

பிஜாப்பூர் : சத்தீஷ்கரில் கடந்த  2 வாரங்களில் 7 மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்கரில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சத்தீஷ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஜூன் மாத முதல் பாதியில், பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையில் 2 உயர்மட்ட தலைவர்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனால், தடை செய்யப்பட்ட அந்த மாவோயிஸ்டு அமைப்புக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில், 2025-ம் ஆண்டு ஜூன் முதல் பாதியில் பிஜாப்பூர் தேசிய பூங்கா பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாக மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டு குழுவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களில் மத்திய குழு உறுப்பினரான கவுதம் என்ற சுதாகர், மற்றும் மாநில குழு உறுப்பினரான பாஸ்கர் ராவ் ஆகிய 2 மூத்த மாவோயிஸ்டு தலைவர்களும் அடங்குவார்கள்.

இவர்களில் மகேஷ் கொதியம் என்பவர் இர்பாகட்டா கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதற்காக கடந்த மார்ச் வரை இவருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து