முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      இந்தியா
Jagan-Mohan-Reddy 2023-06-0

Source: provided

அமராவதி : ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா என்பவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கான்வாயைப் பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில், செலி சிங்கையா மலர்கள் தூவ முயன்றபோது தவறி விழுந்து, ஜெகனின் காரின் முன் வலது சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.

முதலில், விபத்து ஜெகனின் கான்வாயில் உள்ள மற்றொரு வாகனத்தால் நடந்ததாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், ஜெகன் பயணித்த வாகனமே சிங்கையாவை மோதியது உறுதியானது. விபத்துக்குப் பிறகு, சிங்கையாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள், சிங்கையாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து