முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் பிறந்தநாள்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      தமிழகம்
Tamilsai 2023 04 11

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நேற்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடினார்.  இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழிசை சவுந்தரராஜன்: நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜனநாயகன்" தம்பி விஜய்க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்:  தம்பி விஜய்  நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சீமான்: தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன்:  விஜய் தமிழக மக்கள் நலன் காக்கும் பணியாற்ற நல்ல உடல் நலத்துடன், நீடூழி வாழ தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டி.டி.வி. தினகரன்:  விஜய் நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்துடனும், மக்கள் பணியை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை:  சகோதரர் விஜய் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து