முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      தமிழகம்
Vaiko 2025-06-22

Source: provided

ஈரோடு : தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அதிக தொகுதிகள் பெற்று போட்டியிட வேண்டும் என்று  ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ம.தி.மு.க. 31-வது பொதுக்குழு நேற்று காலை 10 மணி அளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப்பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இந்த பொதுக்குழுவில்,  2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும்,  பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். வக்ப் திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறுவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும். மருத்துவ காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். முழு மதுவிலக்கு என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 28 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து