முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      தமிழகம்
Mdu-1 2025-06-22

Source: provided

மதுரை : மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை ரிங்ரோடு அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. மாலை 3 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் பங்கேற்க, வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதலே மாநாட்டு திடல் பகுதியில் திரண்டனர். அவர்கள் மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை தரிசித்தனர்.

தீவிர பரிசோதனை: மாநாட்டு பகுதிக்கு வரிசையில் செல்வதற்கு தடுப்புகளை ஏற்படுத்தி வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்வழியே செல்வோர் அனைவரையும் போலீஸார், தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். முக்கிய நிர்வாகிகள், விஐபிக்கள் மெயின் ரோட்டில் இருந்து மேடைக்கு செல்வதற்கென தனித்தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநாட்டில் பங்கேற்க வந்த பக்தர்கள், பொது மக்கள், பெண்கள் சுடடெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாட்டுக்கு வந்துள்ளனர். இருக்கைகளிலும், தலையிலும் துண்டுகளைப் போட்டுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டு நிகழ்வுகளையும், தலைவர்களின் உரை, ஆன்மிக கலை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பு மூலம் காண, மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்ட எல்இடி திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 மாநாட்டில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் பலர், தங்களது வீடுகளில் இருந்தும், புதிதாகவும் முருகனின் வேல்களை வாங்கியும் வந்துள்ளனர். சிலர் காவடிகளை எடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் வீரவேல், வெற்றி வேல் , முருகனுக்கு அரோகரா போன்ற கோஷ்ங்களை முழங்கினர்.

மாநாட்டுக்கு வரும் வெளியூர் வாகனங்களால் மதுரை நகருக்குள் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, மதுரை எல்லை பகுதியில் இருந்த சுற்றுச்சாலைகளில் வாகனங்களை திருப்பிவிட்டனர். அப்போது, மாநாட்டுக்கு சென்ற சில வாகனங்களிடம் கெடுபிடியும் காட்டியதாக புகார்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும் மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து