முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.பி.எஸ். கார்டூன் விவகாரம்: புதுச்சேரியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      இந்தியா
ADMK 2025-06-22

Source: provided

புதுச்சேரி : எடப்பாடி பழனிச்சாமி கார்டூன் விவகாரத்தில்  தி.மு.க.வைக் கண்டித்து புதுச்சேரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து கார்டூன் வெளியிட்ட  தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவைக் கண்டித்தும்,  தி.மு.க.வின் சமூக வலைதள பக்கங்களை உடனே முடக்கம் செய்ய வலியுறுத்தியும்,  தி.மு.க. அரசை குறைந்த பட்சம் 6 மாதத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் முடக்கம் செய்யக்கோரியும் புதுச்சேரியில் அ.தி.மு.க.வினர் நேற்று கண்டன ஆர்ப்பட்டம் நடத்தினர்.

பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டு  தி.மு.க.வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அன்பழகன் பேசும்போது, ''பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள  தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட அரசாக உள்ளது.  தி.மு.க. முதல்வர் ஸ்டாலினின், தவறுகளை ஆதாரப்பூர்வமாக எங்களது பொதுச்செயலாளர் பழனிச்சாமி மக்களிடம் தினந்தோறும் எடுத்துரைத்து வருகிறார்.

அவருடைய ஆணித்தரமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க திராணியற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரை வைத்து பழனிச்சாமியை விமர்சித்து கார்ட்டூன்களை வெளியிட்டு அற்ப அரசியல் செய்கிறார் . தி.மு.க.வை எதிர்ப்பவர்களை  தி.மு.க. அரசு காவல்துறையினர்களை ஏவிவிட்டு அடக்கு முறையை கையாண்டு வருகின்றனர். ஆனால் அந்த  தி.மு.க.வினரே மற்ற கட்சிகளை அவதூறாக சித்தரித்து வருவது எந்த விதத்தில் நியாயம்" என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து